Sign in or 

| | |
|
ppavalamani |
Latest page update: made by ppavalamani
, Mar 2 2010, 11:21 AM EST
(about this update
About This Update
view changes - complete history) |
|
Keyword tags:
None
More Info: links to this page
|
| Started By | Thread Subject | Replies | Last Post | ||
|---|---|---|---|---|---|
| ppavalamani | பல்சுவை கவிதைகள்-தொடர்ச்சி | 0 | Mar 2 2010, 12:46 PM EST by ppavalamani | ||
|
Thread started: Mar 2 2010, 12:46 PM EST
Watch
உழைப்போம் உறக்கம் வரும்
சிரிப்போம் சஞ்சலம் போகும் வளர்வோம் அனுபவம் வரும் வளைவோம் ஆனந்தம் பெருகும் அணைப்போம் அன்பு வளரும் மறப்போம் உறவு நிலைக்கும் மன்னிப்போம் மாமனிதராவோம் தீதும் நன்றும் பிறர் தர வாரா *-----------* தோற்றதே இல்லை என்பதில் பெருமை இல்லை தோற்றாலும் துவழாமல் எழுவதுதான் சாதனை அயராமல் அறுந்து விழும் இழையை இழுத்து வலையை கட்டி முடித்த சிலந்தியிடம் கற்றான் விடாமுயற்சியின் அருமையை ஓர் மன்னன் பல முறை மோதி கோட்டையை பிடிப்பதுண்டு விழாதவர் அறிவரோ வெற்றியின் ருசியை விடாது விரட்டியவரறிவர் அதன் அருமையை |
|||||
| ppavalamani | பல்சுவை கவிதைகள்-தொடர்ச்சி | 0 | Mar 2 2010, 12:43 PM EST by ppavalamani | ||
|
Thread started: Mar 2 2010, 12:43 PM EST
Watch
கொடுத்திடு கண்ணே
பெருக்கிக் கொடுத்திடு சேமிப்பை செல்வத்தை சந்ததியை நிம்மதியை என் நிழலில் நீயிருந்து எங்கள் நிழலாய் குளிர்ந்திரு இல்லத்தில் இல்லாததில்லை இனியவளே நீயிருக்கையிலே *---------* வாழ்க வளமுடன் எனும் வாசகம் நேர்மறை சிந்தனை பரப்பிடும் வெறும் சம்பிரதாயமும் பழகப் பழக ஆழமாய் பதியும் அனுபவமாகும் நம் எண்ணங்கள் சிறக்கட்டும் வானில் சிறகுகள் விரியட்டும் *-----------* நான் என்றதும் வியந்து போகிறேன் ஒன்றா இரண்டா என் பரிமாணங்கள் பல கோணத்தில் பளீரிடும் மணியோ பிறந்தது ஓர் மகளாய் பேத்தியாய் மலர்ந்தது சகோதரியாய் தோழியாய் மணந்தது மருமகளாய் மனைவியாய் மற்றும் நாத்தியாய் ஓரகத்தியாய் மகிழ்ந்தது தாயாராய் மாமியாராய் மகுடமணிந்தது முதிய பாட்டியாய் அவதாரம் இங்கு இத்தனை எடுத்து அரிதாரம் சரியாய் குழைத்துப் பூசி நாடக மேடைதனில் நடமாடும் 'நான்' பங்குபெற்றிட எத்தனை காட்சிகள் *-------------* சொல்லுங்களேன் நியாயத்தை கூட்டுக் குடியிருப்பின் பொது சிமிட்டி பாதையிலே காணும் சிவப்புக்கம்பள விரிப்பின் மேல் மலர் தூவிய வரவேற்பொத்த அழகிய காட்சியாய் விரியும் றெக்கையில்லா பட்டாம்பூச்சியாய் மெல்லிய எடையில்லா பூவிதழ்கள் வெள்ளையும் இளம் சிகப்புமாய் உருண்டு மிதந்து செல்வதை அடுத்த வீட்டு பாட்டி வெறுக்கிறாள் என்னருமை போகன்வில்லா கொடியை வெட்டச் சொல்லி கட்டளையிடுகிறாள் அவளது நியாயமில்லா ஆணைக்கு அலைந்து ஆதரவு தேடுகிறாள் ஒட்டும் உறவும் இன்றி வாழும் ஒத்தை கிழவி அவள் நிதமும் அக்கம் பக்கம் வம்பிழுக்கிறாள் பொல்லா குசும்பும் செய்கிறாள் பொறுத்துக் கொள் பொங்கிவிடாதே என்கிறார் அன்பான என் துணைவர் ஐயோ பாவம் என்றே தோன்றும் மன நோய் பிறவிகள் இவர்கள் |
|||||
| ppavalamani | பல்சுவை கவிதைகள்-தொடர்ச்சி | 0 | Mar 2 2010, 12:39 PM EST by ppavalamani | ||
|
Thread started: Mar 2 2010, 12:39 PM EST
Watch
வாழ்விலும் தான் ஏற்ற இறக்கங்கள்
மாறுகின்ற சக்கரத்தின் சுழற்சிகள் ஏற்றிவிடும் ஏணிகள் எத்தனையோ கொத்தும் பாம்புகள் அத்தனையே இரண்டிலும் உண்டு சாதகங்கள் ஊக்கம் தரும் இனிய வெற்றிகள் உரத்தை வளர்க்கும் தோல்விகள் *--------* விஷம் நின்றுவிட்டது தொண்டையில் நீலகண்டரின் பத்தினி கைப்பிடியில் முடியாத காரியமுண்டோ மூவுலகில் அனைத்தும் இயங்குது அவள் சக்தியில் *--------------* உன்னிடமே இருக்கும் நிம்மதியை எங்கே வெளியே தேடுகிறாய் கரையிலே அலையடிக்கும்தான் ஆழத்தில் அமைதி நிலவுமே சந்தடியான ஒரு சதுக்கம் கூட உள்மன நிச்சலனம் தடுக்குமோ ஆரவார அவசரங்கள் நடுவிலும் அதிராத தனி தடத்தில் செல்லும் மனம் ஒரு பழக்கிய வித்தைக் கரடி *---------* வலிவு வேண்டி வணங்கினான் வேதனையில் அமிழ்ந்தபோது நலம் தர தேவி சக்தியினை நல் வீணை நம் கவி பாரதி தாழாது உழைத்து ஊழ் வெல்ல திருவினையாக்கும் முயற்சியே நெஞ்சில் நீதி நிலைத்திருக்க அஞ்சாது அவனியில் துலங்கி அமரனாய் அவன் வாழ்கிறான் அமுதமான தமிழ் வரிகளிலே *-----------* கவியாகிறான் காதலன் கற்பனையில் மிதப்பவன் வாத்தெல்லாம் அன்னமே உவமான அருவியிலே குளித்துச் சிலிர்க்கிறான் றெக்கையின்றி பறக்கிறான் இரவு பகல் அறியாது நிஜம் நிழல் தெரியாது மயங்கித் திரிந்த பின் தரைக்கு இறங்குவான் *------------* இதற்காகத்தானா? ஆஹா! அருமையான பதம்! வினாவில் வழிவது என்ன ரசம்? பரிதாபம்? பச்சாதாபம்? வேதனை? விரக்தி? ஏமாற்றம்? தடுமாற்றம்? களிப்பு? எக்களிப்பு? காத்திருத்தலின் முடிவு? வியப்பின் விழி விரிப்பு? எத்தனை சாத்தியம்? சந்தர்ப்பம் சூழல் கலைஞன் தூரிகை வரையப்போகும் காட்சியோ? எல்லையுண்டோ கற்பனைக்கு? *----------* நடிகை இவளை வெல்ல முடியுமோ பால் போல் முகம் பளிங்குக் கண்கள் பாவங்கள் நொடிக்கு ஒன்று தோன்ற ஆட்டுவிக்கிறாள் என் சின்னப் பேத்தி |
|||||